(ஆர்.விதுஷா)

வேலையில்லா பட்டதாரிகள் நாய்களை விடவும் கீழ்த்தனமானவர்களா எனக் கேள்வி எழுப்பிய ஒன்றிணைந்த  வேலையில்ல  பட்டதாரிகள் சங்கம், வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தகுந்த தீர்வை பெற்றுத்தரும் வரையில்  எதிர்ப்பு  நடவடிக்கைகளை முன்னெடுப்போம் எனவும குறிப்பிட்டுள்ளனர்.

பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள  வரவுசெலவு  திட்டத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கான  தீர்வு  குறித்து எவ்வித  தீர்வுகளம் முன்மொழியப்படவில்லை. கட்டாக்காலி நாய்களை   பாதுகாப்பதற்காகவும் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவும்  கூட  வரவு  - செலவுத்திட்டத்தில்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  எனினும் வேலையில்லாப் பட்டதாரிகளின்   பிரச்சினைகளுக்கு உரிய  தீர்வை பெற்று கொடுப்பதற்கான நிதி தவிர்ந்த குறைந்த  பட்டச   முன்மொழிவுகள் கூட வரவு  செலவுத்திட்டத்தில்  இடம்பெறாமை கவலையளிக்கின்றது எனவும்  ஒன்றிணைந்த  வேலையில்ல  பட்டதாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.