நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் அடங்கிய குழுவினர் இன்று கிளிநொச்சி முகமாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். 

குறித்த குழுவினர் இன்று முற்பகல் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதநேய கண்ணிவெடி அகற்றம் செயற்பாடுகளை பார்வையிட்டதுடன், தொடர்்து குறித்த செயற்பாட்டினை முன்னெடுக்கும் நிறுவனத்தில் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர். 

நோர்வே அரசாங்கத்தின் உதவியுடன் குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றம் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் குறித்த விஜயம் முக்கியம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.