நாட்டில் இதுவரை காலமும் மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி அழிக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கடந்த காலங்களில் நாட்டில் மீட்கப்பட்ட ஹெரோயின், கொக்கெய்ன், கஞ்சா உட்பட அனைத்து வகையான போதைப்பொருட்களுமே இவ்வாறு அழிக்கப்படவுள்ளன.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி நீதிவான் முன்னிலையில், கட்டுநாயக்கவில் வைத்து குறித்த போதைப்பொருட்கள் அழிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.