(நா.தனுஜா)

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நியாமற்ற வகையிலேயே சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார் என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு நாடளாவிய ரீதியில் 50 இலட்சம் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கும் செயற்பாட்டை பொதுபலசேனா அமைப்பு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக இன்று ஆரம்பித்திருந்தது.