இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுவை நிஷாந்த ரணதுங்க விளையாட்டுத்துறை அமைச்சில் சமர்ப்பித்துள்ளார்.

இலங்கை கிரிக்கட் சபை தேர்தலுக்கான வேட்புமனு ஏற்கும் நடவடிக்கை கடந்த 24 ஆம் திகதி முதல் ஆரம்பமானது.

எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள கிரிக்கட் சபை தேர்தலுக்கான வேட்புமனு ஏற்பு டிசம்பர்  மாதம் 4 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

86 கிரிகெட் கழகங்களை சேர்ந்த 147 அங்கத்தவர்கள் இத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

நிஷாந்த ரணதுகங்க,  அர்ஜுன ரணதுங்கவின் சகோதரர் என்பதுடன் இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.