பெண் இயக்குநர் சுதா கொங்காராவின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கும் நடிகர் சூர்யா, அந்த படத்தில் தொழிலதிபராக நடிக்கவிருக்கிறாராம்.

நடிகர் சூர்யா தற்போது கேவி ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ என்ற படத்தில் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரியாக நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து அவர் துரோகி, இறுதிச்சுற்று, ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சுதா கொங்காரா என்ற இயக்குனரின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். 

இன்னும் பெயரிடப்படாத  இந்த படத்தில் தொழிலதிபர் ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தான் திரைக்கதையாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்று தெரிய வருகிறது.

அவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றிவிட்டு, பிறகு அனைத்து தரப்பு மக்களும் விமான சேவையினை பயன்படுத்த வேண்டும் என்று எண்ணி, குறைந்த கட்டணத்திலான விமான சேவையை அறிமுகப்படுத்தியவர். இந்த கதாபாத்திரத்தில் தான் சூரியா நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கு முன் கஜினி படத்தில் சூர்யா  தொழிலதிபராக நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.