உரிய வயது வருவதற்கு முன்னரே 16 வயதில் சட்ட விரோத திருமணம் செய்து வைக்கும் பெற்றோரின் முயற்சிக்கு மறுப்பு தெரிவித்த சிறுமிக்கு பெற்றோரே உணவில் விஷம் வைத்ததாக எழுந்துள்ள புகார் தருமபுரியில் பரபரப்பாகியுள்ளது.

தருமபுரி அருகே திருமணத்துக்கு உடன்படாத பாடசாலை மாணவிக்கு விஷம் கலந்த உணவு கொடுத்ததாக பெற்றோரைக் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அரச பாடசாலையில் கல்வி கற்று வரும் 16 வயது மாணவிக்கு அவரது பெற்றோர் திருமணம் ஏற்பாடு செய்துள்ளனர், அதற்கு மாணவி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஆத்திரம் அடைந்த பெற்றோர் மதிய உணவில் விஷம் கலந்த உணவை கொடுத்ததாக  புகார் எழுந்தது.

இதனையடுத்து குறித்த சிறுமி மகேந்திர மங்கலம் பொலிஸ்க்கு சென்று பெற்றோர் மீது புகார் அளித்தார்.

விசாரணையில் உணவில் விஷம் கலக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து பொலிஸார் பெற்றோரை கைது செய்ததாகத் தெரிவித்தனர்.