(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

ரூபாவின் வீழ்ச்சியை பாதுகாக்க தவறியமையினால் நாட்டின் கடன் ஆயிரம் பில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

அத்துடன் மஹிந்த ராஜபக்ஷ்வின் 10 வருட காலத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடனை இந்த அரசாங்கம் 4 வருடங்களில் பெற்றுக்கொண்டுள்ளது. 

இதன் மூலம் வரலாற்றில் எந்த அரசாங்கமும் பெற்றுக்கொள்ளாக கடனை இந்த அரசாங்கம் நான்கு வருடங்களில் பெற்றுள்ளது. ஆனால் பெற்றுக்கொள்ளப்பட்ட கடனுக்கு மேற்கொள்ளப்பட்ட எந்த வேலைத்திட்டமும் காண்பதற்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்ட விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.