Informatics Institute of Technology ஏற்பாட்டில்Colombo Fashion Dialogue நிகழ்வு

Published By: R. Kalaichelvan

06 Mar, 2019 | 12:10 PM
image

இலங்கையில் பிரித்தானிய உயர் கல்வியை வழங்குவதில் முன்னோடியாகவும் நாட்டிலுள்ள முதன்மையான தகவல் தொழில்நுட்ப மற்றும் வர்த்தக உயர் கல்வி நிறுவனமாகவும் திகழ்ந்து வருகின்ற Informatics Institute of Technology (IIT), அண்மையில் Fashion Business Management துறையில் முதுமாணி (Masters) கற்கைநெறியை அறிமுகப்படுத்தி நவநாகரீக துறையிலும் கால்பதித்துள்ளது. 

தனது எல்லையை விரிவுபடுத்தியுள்ள IIT, அண்மையில் Colombo Fashion Dialogue என்ற நிகழ்வை ஏற்பாடு செய்திருந்ததுடன் அது கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திலுள்ள லாவென்டர் அரங்கில் ‘Skills for Success in the Fashion industry of the Future’என்ற தொனிப்பொருளில் அறிவுப் பகிர்வு அமர்வாக அமையப்பெற்றது.

University of Westminster பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளரான Caroline Curtis,Emerald International நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான A.F.M Ikram மற்றும் Moose Clothing Company  நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான Hasib Omar அடங்கலாக நவநாகரீக தொழிற்துறையைச் சார்ந்த முன்னணி பிரபலங்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர். 

Daiwa Impex நிறுவனத்தின் பணிப்பாளரான Saroj Lama Hewa அவர்களின் தலைமையில் குழு நிலை கலந்துரையாடல் அமர்வொன்றும் நிகழ்வினை அலங்கரித்திருந்தது.

University of Westminster பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான  Caroline Curtis அவர்கள் தற்காலத்து நவநாகரீகம் மற்றும் ஆடை நிலையமைப்பு அதன் எதிர்கால சவால்கள் மற்றும் இத்துறையை முன்னெடுத்துரூபவ் மேம்படுத்துவதற்கு அடுத்த தலைமுறைக்கு தேவைப்படுகின்ற திறன்கள் தொடர்பில் கலந்து ஆலோசித்திருந்தார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் “நவநாகரீக துறையில் வர்த்தகநாமம் ஒன்று தலைசிறந்து விளங்குவதற்கு வடிவமைப்பு மற்றும் முகாமைத்துவம் என்பன சம அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை. IIT  வழங்கும் Masters in Fashion Business Management கற்கைநெறியானது ஆடை விற்பனைச் சங்கிலியொன்றை எவ்வாறு நிர்வகிப்பது மற்றும் வாடிக்கையாளர்களை எட்டும் வரை உற்பத்தியாளரிடமிருந்து உங்களது உற்பத்திகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது ஆகியவை தொடர்பில் தொழில்நுட்ப திறன்கள் மற்றும் அறிவை மாணவர்களுக்கு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்பாடநெறியின் மூலமாக வழங்கப்படுகின்ற தொடர்பாடல்,புரிந்துணர்வு மற்றும் ஒன்றுபட்டு உழைக்கும் திறன்கள் போன்ற மென்திறமைகளே வெற்றிக்கான ஏணிப்படியாக உள்ளன. ஆடைத்துறையில் தலைசிறந்து திகழ்வதற்கு ஆடைத் துறை சார்ந்த அனைவருடனும் ஒன்றுபட்டு உழைத்து வாடிக்கையாளர்களை புரிந்து கொள்ள வேண்டும். 

இந்த கற்கைநெறியின் மூலமாக கிடைக்கப்பெறுகின்ற கோட்பாடு மற்றும் செயன்முறை அறிவானது அளவியல் மற்றும் தரவியல் தரவுகளை ஆய்வு செய்து ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திகளினூடாக சிறப்பாக தீர்மானம் வகுத்தல், பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல், இலக்கு வைக்கப்படுகின்ற சந்தையை புரிந்து கொள்ளல் ஆகிய திறமைகளை வளர்த்துக்கொள்ள உதவுகின்றதுரூபவ்” என்று கூறினார்.

Emerald International நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான A.F.M Ikram அவர்கள்Emerald ஷேர்ட்டுக்களை வழங்க ஆரம்பித்தமை மற்றும் அதனை மீள் அறிமுகம் செய்தமை தொடர்பான தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டும் தற்போதைய வர்த்தக முயற்சிகள் தொடர்பில் கலந்து ஆலோசித்தும் கூடியிருந்தோருக்கு மிகவும் பயனுள்ள தகவல்களை வழங்கியிருந்தார். 

வர்த்தகத்தை ஆரம்பிப்பதிலிருந்து அதன் வளர்ச்சிப் படிகள் தொடர்பில் அவர் விளக்கியிருந்தார்.

உள்நாட்டுத் தொழிற்துறையில் காணப்படுகின்ற வர்த்தக முறைமைகள் மற்றும் நிலையமைப்புக்கள் தொடர்பில் அவர் கலந்து ஆலோசித்திருந்தார். 

இத்தொழிற்துறையில் அனுபவம் வாய்ந்த ஒருவர் என்ற வகையில்  நவநாகரீகத் துறையில் உயர் கல்வியை முன்னெடுக்க விரும்புகின்ற இளம் மாணவர்கள் நகரப்புற மற்றும் புறநகர சந்தையில் நவநாகரீகத்தை புரிந்துகொள்வதற்கு வேறுபட்ட நிலைமைகள் மற்றும் முறைமைகளில் ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகளை எவ்வாறு ஒப்பீடு செய்ய வேண்டும் என்பது தொடர்பில் தனது ஆழமான அறிவைப் பகிர்ந்து கொண்டார். உள்@ர் சந்தையில் காணப்படுகின்ற பல்வேறுபட்ட சவால்கள் தொடர்பிலும் அவர் கலந்தாலோசித்திருந்தார்.

Moose Clothing Company நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான Hasib Omar அவர்கள் இலங்கையில் ஆடைத்தொழிற்துறையின் உகந்த வளர்ச்சி ஏனைய நுகர்வோர் உற்பத்திகளுடன் ஒப்பிடுகையில் கடந்த காலங்களில் அதன் வளர்ச்சி ஆகியவை தொடர்பில் விரிவாக விளக்கியிருந்தார். நவநாகரீக தொழிற்துறையில் முக்கியமான அம்சங்கள் தொடர்பில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர் குறைந்தபட்ச காலம் மற்றும் செலவில் மிகவும் கட்டுபடியாகும் விலைகளில் மேம்பட்ட பெறுமானத்தையும் சிறப்பம்சங்களையும் வழங்கும் வகையில் சாத்தியமான மிகச் சிறந்த உற்பத்திகளை அதன் மூலமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

போதுமான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியுடன் சூழல் ரீதியாக நிலைபேற்றியல் கொண்ட மற்றும் இலாபகரமான உற்பத்திகள் எந்த அளவிற்கு சாத்தியம் என்பதையும் அவர் விளக்கியிருந்தார். சர்வதேச வர்த்தகநாமங்களுக்கு சவால்

விடுத்து பிரகாசமான எதிர்காலத்தை தோற்றுவிப்பதற்கு இலங்கையால் முடியும் என தான் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Daiwa Impex நிறுவனத்தின் பணிப்பாளரான Saroj Lama Hewa அவர்களின் தலைமையில் குழு நிலை கலந்துரையாடல் அமர்வு நிகழ்வினை மேலும் அலங்கரித்தது. ஒரே தொழிற்துறையில் வெவ்வேறு பரிமாணங்களைச் சார்ந்த 3 பிரபலங்களின் ஒருமித்த கலந்துரையாடல் இத்துறை சார்ந்த சூடான விவாதங்கள் மற்றும் பிரச்சனைகள் தொடர்பில் தங்களது கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைக்க இடமளித்ததுடன் கேட்போர் அதன் மூலமாக மிகவும் பயனடைந்தனர்.

நவநாகரீக அல்லது ஆடைத் தொழிற்துறையானது மிகவும் வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற தொழிற்துறைகளில் ஒன்றாகக் காணப்படுவதுடன் உலகெங்கிலும் இது பல்வேறுபட்ட பரிணாமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றது. பல்வேறுபட்ட மையங்களை இணைக்கும் வகையில் இன்று இத்தொழிற்துறையானது உலகளாவில் கைகோர்த்துள்ளது. எனினும் காலம் மாறுகின்ற நிலையில்,தீர்க்கப்பட வேண்டிய பல்வேறு மில்லேனிய சவால்கள் தோன்றியுள்ளன. வாடிக்கையாளர்கள் மாறி வருகின்றனர்.

அவர்கள் இன்னும் அதிகளவில் வெளிப்படையான வர்த்தக முறைமைகளை நாடுகின்றனர். இந்த உற்பத்திகள் எங்கிருந்து பெறப்படுகின்றன மற்றும் அவற்றின் நிலைபேற்றியல் தொடர்பில் அவர்கள் வினவுகின்றனர். இந்த மாறும் மற்றும் மங்கும் போக்குகளே தொழிற்துறை முன்செல்வதற்கு இடமளித்துள்ளதாக குழு நிலை கலந்துரையாடலின் போது

A.F.M. Ikram அவர்கள் தனது கருத்தினை பகிர்ந்திருந்தார். இச்சவால்களை எதிர்கொண்டு நிலைபேற்றியல் கொண்ட தீர்வுகள் மற்றும் சந்தையில் சிறப்பான தெரிவுகளுடன் முன்செல்வதற்கு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மீது தொழிற்துறை அதிக அளவில் முதலீட்டை மேற்கொள்ள வேண்டி உள்ளதுடன் மில்லேனிய போக்குகளுக்கு அமைவாக மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இதற்கு திறன்மிக்க தொழில் சார்ந்தவர்கள் இத்தொழிற்துறைக்கு தேவைப்படுகின்றனர். திறன்மிக்க தொழில் சார்ந்தவர்கள் என்பதன் வரைவிலக்கணம் பாரியளவில் மாறியுள்ளது.செயற்கை நுண்ணறிவின் (artificial intelligence) அறிமுகமானது இது வரை கண்டிராத பரிணாமத்தை வெளிக்கொணரவுள்ளது. ஆகவே ஆடைத் தொழிற்துறையில் மேம்பாடுகளுக்கு வாய்ப்பினைக் கொண்டுள்ள ஒரு முன்னணி நாடு என்ற வகையில்,இலங்கை நவநாகரீக தொழிற்துறையை சர்வதேச அரங்கிற்கு முன்னேற்றுவதற்கு உதவுவதற்கு திறன்மிக்க தலைமுறையை தோற்றுவிப்பது இலங்கையின் தேவையாக உள்ளது.

 மறுபுறத்தே இலங்கையைப் பொறுத்தவரையில் அதன் அடைவு மட்டம் தொடர்பில் காணப்படும் வாய்ப்புக்களை கருதுகையில் தொழிற்துறைக்கு புதிய சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் மிக முக்கியமாக அமைந்துள்ளமையால் தொழில் முயற்சியாண்மையை வலுப்படுத்தி ஊக்குவிக்க நாம் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த நோக்கத்தை இலங்கை அடையப்பெறுவதை நோக்கி அது நகர்வதற்கான முதற்படியாக மிகவும் புகழ்பெற்ற இக்கல்வி நிறுவனமான  IIT இன் Masters in Fashion Business Management கற்கைநெறி அறிமுகமாக்கப்பட்டுள்ளது.

University of Westminster பல்கலைக்கழகத்தின் நிபுணத்துவம் மற்றும் அறிவு ஆகியவற்றுடன் இப்பங்குடமையின் மூலமாக இலங்கையின் நவநாகரீக தொழிற்துறையின் அடுத்த தலைமுறைக்கு பிரகாசமான எதிர்காலத்தைத் தோற்றுவிக்க முடியும் என IIT நம்புகின்றது.

1990 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட IITஆனது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் வியாபாரம் ஆகிய துறைகளில் நன்மதிப்புடைய பிரித்தானிய பட்டப்படிப்புக்களை வழங்க ஆரம்பித்த முதலாவது தனியார் உயர் கல்வி நிலையம் என்ற பெருமையைக் கொண்டுள்ளது. 

ஐக்கிய இராச்சியத்திலுள்ள University of Westminster மற்றும் Robert Gordon University ஆகியவற்றின் பட்டப்படிப்பு கற்கைநெறிகளை வழங்கி வருகின்றது. உலகத்தரம் வாய்ந்த பட்டதாரிகளை தோற்றுவித்துள்ளதன் மூலமாக கடந்த காலங்களில் இலங்கையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத் துறைகளுக்கு வலுவூட்டுவதில் IIT முக்கியமான பங்கு வகித்துள்ளது. இந்த பட்டதாரிகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தக மற்றும் அரச ஸ்தாபனங்களுக்கு பங்களிப்பினை வழங்கி வெற்றிகரமான தொழில் முயற்சியாளர்களாகவும் மற்றும் தகவல் தொழில்நுட்பஃவர்த்தகத் தொழிற்துறை சார்ந்தவர்களாகவும் மாறியுள்ளனர். 

ஆரம்பிக்கப்பட்ட காலம் முதற்கொண்டு பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகளை IITஉருவாக்கியுள்ளதுடன், உலகெங்கிலும் பல நூற்றுக்கணக்கான ஸ்தாபனங்களில் அவர்கள் சிறப்பாக சேவையாற்றி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58