மன்னார் நகர் பகுதியில்  ஆபத்தான கிளைமோர் மீட்பு குண்டு ஒன்றை மன்னார் பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர்.

மன்னார் பெரியகடை பள்ளிவாசல் ஒழுங்கை மற்றும் மீன் சந்தை பகுதிக்கு செல்லும் பிரதன பாதை சந்தியில் இருந்து குறித்த  கிளைமோர் குண்டு  மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை மன்னார் நகர சபை ஊழியர்களினால் துப்பவரவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் குப்பைக்குள் இருந்து குறித்த பகுதியில் இருந்து குண்டு மீட்கப்பட்டுள்ளது.

மேற்படி மீட்கப்பட்ட கிளைமோர் குண்டு சுமார் 3 கிலோ கிராம் நிறை கொண்டது என தெரிய வருகின்றது.

குறித்த பகுதியில் அதிகளவிலான பழைய இரும்புகள் கொள்வனவு செய்யும் கடைகள் காணப்படுகின்றமையினால் பழைய இரும்பு பொருட்களுடன் கலந்து குறித்த கிளைமோரும் வந்திருக்களாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.

அதே நேரத்தில் குறித்த வெடி பொருள் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.