லண்டன் நகரத்தின் முக்கியமான இரு விமான நிலையங்கள் மற்றும் ஒரு ரயில் நிலையத்துக்கும் வெடிபொருள் பார்சல்கள் அனுப்பப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

லண்டன் சிட்டி மற்றும் ஹீத்ரூ விமான நிலையங்களிலும் வாட்டர்லூ ரயில் நிலையத்திலும் வெடிப்பொருள் பார்சல்களை கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து லண்டன் நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விமான நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் தபால் பைகளில் வெடிப்பொருட்கள் இருப்பதாக தெரிய வந்ததையடுத்து அங்கு தீவிரவாதத் தடுப்புப் பிரிவினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த வெடிப்பொருட்கள் சிறிய அளவிலானவை என்றும் பொலிசார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. இதனால் எந்த விமானமும் தாமதமாகவில்லை. யாரும் காயம் அடையவில்லை என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் அந்த வெடிப் பொருளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறிது நேரம் விமான நிலையம் மூடப்பட்டது என அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது