அட்டாளைச்சேனை பகுதியிலுள்ள ஆசிரியர் கலாசாலையிலிருந்து அளுத்கமவுக்கு கல்விச் சுற்றுலா சென்ற பஸ்ஸொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாவனெல்லை கீழ் கடுகண்ணாவை, அம்பலம பகுதியில் வைத்தே குறித்த பஸ் வீதியை விட்டு விலகி நேற்றிரவு 9.15 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பஸ்ஸின் சாரதி உயிரிழந்ததுடன் மேலும் 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மாவனெல்லை வைத்தியசாலையிலும் கண்டி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமையாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக கூறும் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.