இலங்கையில் அமைந்துள்ள பாகிஸ்தானிய இஸ்லாமிய குடியரசின் உயர் ஸ்தானிகர் பணியகம், பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்துடன் ஒன்றிணைந்து, இலங்கை பாகிஸ்தானிற்கிடையிலான ‘பெளத்த மற்றும் காந்தாரா நாகரீகம்’ கலாசார இணைப்பு என்ற தலைப்பிலான சர்வதேச கருத்தரங்கினை ஏற்பாடு செய்துள்ளது. 

இக்கருத்தரங்கு ஹோமாகமவில் அமைந்துள்ள பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் பிரதான அவைக்களத்திலே மாரச் மாதம்  11 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

சீனா, ஜெர்மனி,  மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைசிறந்த அறிஞர்கள் இச்சர்வதேச கருத்தரங்கில் உரை நிகழ்த்தவுள்ளனர்.

பாகிஸ்தான் பௌத்த கலைகள் மற்றும் கலாசாரங்களின் தாயகமாகவும் பௌத்தத்தின் இரண்டாவது புனித நிலமாகவும் விளங்குகின்றது. பௌத்தத்தின் வருகையும், வளர்ச்சியும் பாகிஸ்தானின் பண்டைய நிலப்பகுதியுடன் பாரிய தொடர்பினை கொண்டுள்ளது.  

பௌத்தமத நடவடிக்கைகள் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மிஸனரிகள் ஊடாக இறுதிகட்டத்தினை அடைந்ததுடன், இந்நிலப்பரப்பிலேதான் உலகத்தின் மதமாக பரிணமித்தது.

இச்சர்வதேச கருத்தரங்கிலே பங்குபற்ற விரும்புபவர்கள் 0112055681, 0721140002 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு தங்களது ஆசனங்களை ஒதுக்கிக்கொள்ளலாம்.