(நா.தினுஷா)

விசேட நீதிமன்றங்கள் மூன்றில் ஒரு நீதிமன்றம் மாத்திரம் தனது பணிகளை முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் எஞ்சியுள்ள இரண்டு விசேட நீதிமன்றங்களின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். 

அத்துடன் குறித்த இரண்டு நீதிமன்றங்களை உருவாக்குவதற்கான பணிகளை துரிதகதியில் மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்.

மூன்று விசேட நீதிமன்றங்கள் தொடர்பான விசாரனைகளை மீண்டும் ஆரம்பிப்பது போன்று போதைப்பொருள் விற்பனைகளுடன் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்தும் விசாரணைகளை மேற்கொள்ளவும் விசேட தனியான விசேட நீதிமன்றத்தை உருவாக்குவதற்கு தேவையான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.