(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட விடயங்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவேற்றும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. 

அத்துடன் வரவேற்கத்தக்க வரவு செலவு திட்டமாகவே  காண்கின்றோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டம் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர் அதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்துடன் வரவு செலவு திட்டத்தில் சாதாரண மக்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அரச ஊழியர்கள், விவசாயிகளுக்கும் பல நண்மைகள் இருக்கின்றன. அதேபோன்று வடக்கில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்களை மீள் குடியேற்ற தேவையான வளங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

எனவே இந்த வரவு செலவு திட்டத்தை மிகவும் வரவேற்கத்தக்க வரவு செலவு திட்டமாகவே நாங்கள் காண்கின்றோம் என்றார்.