(ஆர்.விதுஷா)
தொற்றாத நோயை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு புதிய அங்கமாக தொலைபேசிகளினூடாக கணக்கெடுப்பு முறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தொற்றா நோய்களுக்கான பணியகத்தின் சமூக வைத்திய ஆலோசகர் கபில பியசேன தெரிவித்தார். 
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பாரிய பங்களிப்பை செலுத்தும் இளம் சமூகத்தினர் தொற்றாத நோய்களின் காரணமாக அதிகரித்த மட்டத்தில் உயிரிழக்கின்றமை ஆய்வுகளினூடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முறையான சுகாதார பழக்கமின்மை, புகையிலை பாவனை, மதுபான பாவனை மற்று முறையற்ற உணவுப்பழக்க வழக்கங்களின் காரணமாகவே அதிகளவில் தொற்றாத நோய்கள் ஏற்படுகின்றன.
இத்தகைய காரணிகளினால் , நாளொன்றிற்கு 4 தொடக்கம் 5 வரையான இளம் வயதினர் உயிரிழக்க நேரிடுகின்றது. அதனை கருத்தில் கொண்டு சுகாதார அமைச்சினால், தொற்றாத நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளோர் தொடர்பிலான கணக்கெடுப்புக்களை மேற்கொண்டு தொற்றாத நோயிலிருந்து இளம் சமுதாயத்தினரை பாதுகாப்பதுடன், நாட்டிலிருந்து தொற்றாத நோயை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு புதிய அங்கமாக தொலைபேசிகளினூடாக கணக்கெடுப்பு முறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தொற்றாத நோய்களுக்கான பணியகத்தின் சமூக வைத்திய ஆலோசகர் கபில பியசேன தெரிவித்தார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM