பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ இணையதளம் இன்று திடீரென முடங்கியதால், வலைத்தளத்தில் எந்த தகவலையும் பார்க்க முடியவில்லை.
பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்தியில் ஆளும் பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் பல்வேறு நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரச்சாரம் செய்கின்றனர்.
கட்சியின் செயற்பாடு மற்றும் தலைவர்களின் பிரச்சார பயணங்கள் அடங்கிய தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதேபோல் மாநில வாரியாகவும் பா.ஜ.க.வுக்கு தனியாக இணையதளம் தொடங்கப்பட்டு, தகவல்கள் வெளியிடப்படுகின்றன.
இந்நிலையில், பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.bjp.org இன்று திடீரென முடங்கியது.
பா.ஜ.க. இணையதளத்தை திறந்தால், திரையில் ‘எரர் 522’ தோன்றியது. வேறு எந்த தகவலையும் பார்க்க முடியவில்லை. இதனை அறிந்த கட்சியின் தகவல் தொழில்நுட்பக்குழு, முடக்கப்பட்ட இணையதளத்தை மீட்டெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. விரைவில் இணையதளம் செயற்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கடந்த ஆண்டு கோவா மாநில பாஜக இணையதளம் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM