உரிய தருணத்தில் அரசியலில் நுழைவேன் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது  செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

உரியநேரம் வராதவரை நான் அரசியல் அரங்கில் காலடி எடுத்துவைக்கமாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தன்னால் மாற்றத்தை மேற்கொள்வதற்காக பணியாற்ற முடியும் என குறிப்பிட்டுள்ள கோத்தபாய தற்போது வாய்பேச்சில் வல்லவர்கள் மாத்திரமே உள்ளனர் செயற்திறன் மிக்கவர்கள் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார கொள்கைகளை மாற்றவேண்டும் எனவும் அவர் குறிபிட்டுள்ளார்.