பேஸ்புக் மெசெஞ்சரில் இரவு நேர பயன்பாட்டுக்கான ”டார்க் மோட்” வசதி ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது. அதை எளிதாகக் கண்டுபிடித்து பயன்படுத்தலாம். 

உலகின் அதிக பயனாளர்களை உடைய சமூக வலைத்தளம் பேஸ்புக். இதன் சட்டிங் (Chatting) அப்ளிகேஷன் மெசெஞ்சர். வாட்ஸ் ஆப்க்கு அடுத்தபடியாக அதிகம் பேர் பயன்படுத்துவதாக மெசேஞ்சர் உள்ளது. 

மெசெஞ்சரில் டார்க் மோட் (Dark Mode) வசதி கிடைக்கும் என நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் ஐபோன்களுக்கு மட்டும் டார்க் மோட் கிடைக்கும் என தகவல் வந்தது. 

டார்க் மோட் வசதிக்கான சோதனையில் பேஸ்புக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மெசெஞ்சரில் டார்க் மோட் வசதியை பயன்படுத்த வெளிப்படையாக எந்த அம்சமும் இல்லை. மறைந்திருக்கும் அந்த வசதியை எப்படி பயன்படுத்தலாம் எனப் பார்க்கலாம். 

1. பேஸ்புக் மெசெஞ்சரில் யாராவது ஒருவருக்கு அல்லது நேரடியாக உங்களுக்கு பிறை வடிவிலான (moon) எமோஜி அனுப்ப வேண்டும்.

2.அனுப்பிய உடன் நீங்கள் டார்க் மோட் வசதியைக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்ற செய்தி திரையில் தோன்றும். 

3. அப்போது Turn On என்பதைத் தேர்வு செய்தால் டார்க் மோட் கிடைத்துவிடும். 

4. பிறை எமோஜி அனுப்பியவருக்கு மட்டுமின்றி முழுமையாகவே டார்க் மோட் வந்துவிடும். 

டார்க் மோட்டை மீண்டும் பழையபடி மாற்ற Profile பகுதிக்குச் சென்றால் Dark Mode பட்டன் இருக்கும். அதைத் மாற்றினால் முந்தைய தோற்றம் வந்துவிடும்.