பன்னிப்பிட்டிய பகுதியில் கொள்ளையிடப்பட்ட பெரும் மதிப்புடைய வைரக்கல்லுடன் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பன்னிப்பிட்டி பகுதியில் மாகந்துரே மதூஷினால் கடத்தப்பட்ட 500 கோடி ரூபாவிற்கும்  அதிகம் பெறுமதியான  வைரக்கல் கடத்தலுடன் தொடர்புடைய நபரே பேலியகொடையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கடத்தப்பட்ட வைரக்கல் பாணந்துறை, கெசல்வத்த பகுதியில் உள்ள வீடோன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பாணந்துறையை  சேர்ந்தவர் ஆவார்.

இவ்வாறு மீட்கப்பட்டுள்ள வைரக்கல் மாகந்துரே மதூஷின் வழிநடத்தலில் கடத்தப்பட்ட ரூபா 500 கோடிக்கும் அதிகம் பெறுமதியான வைரக்கல் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.