கென்யாவில் ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கியதில் கென்யாவைச்  ஐவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

கென்யாவின் வடமேற்கு பகுதியில் உள்ள துர்கானா ஏரியின் நடுவில் சிறிய தீவு ஒன்று அமைந்துள்ளது. குறித்த  தீவில் தேசிய பூங்கா உள்ளது. இந்த பூங்காவை சுற்றிப்பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். ஹெலிகொப்டர்கள் மூலமாக சுற்றுலாப் பயணிகள் பூங்காவுக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு 2 ஹெலிகொப்டர்கள் தேசிய பூங்காவிற்கு சென்ற ஹெலிகொப்டர் ஒன்று தரையிறங்கும்போது, எதிர்பாராதவிதமாக தரையில் விழுந்து நொறுங்கியுள்ளது.

குறித்த கோர விபத்தில் கென்யாவைச் சேர்ந்த விமானியும், அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.