சித்திரை புத்தாண்டு மேற்கொடுப்பனவுகளை அதிகரிக்கவும் மற்றும்  பல கோரிக்கைகளை முன்வைத்து துறைமுக பணியாளர்கள், கடந்த ஆறு நாட்களாக மேற்கொண்டு வந்த வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

பிரதமருடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் குறித்த போனஸ் கொடுப்பனவினை பெற்று தருவதாக கடிதம் மூலம் உறுதியளித்தமையால் இப்போராட்டத்தை கைவிட்டதாக துறைமுக ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் லால் பெங்கமுவகே குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தங்களுடைய மற்றைய கோரிக்கைகளுக்கான தீர்வினை ஒரு மாதத்திற்குள் பெற்று தருவதாக பிரதமர் உறுதியளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.