இந்தியாவின் புத்தகயாவையொத்த அமைப்பைக் கொண்டதாக புத்தகயா ஸ்தூபி ஒன்று கண்டி பேராதனை சுபோதாராம மஹா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. 

மேற்படி திறப்பு விழா நிகழ்வின் போது அதனை நிர்மாணித்த இந்திய சிற்பியான மாமல்லபுரம் ஸ்தபதி திரு. அசோக்குமார்  ஜனாதிபதி மைந்திரிபால சிரிசேனாவினால் கௌரவிக்கப்பட்டார். 

மேற்படி வைபவத்தில் இந்தியாவைச் சேர்ந்த சிறப்பாச்சாரியார்களும் கண்டி உதவி இந்தியத் தூதுவர் திரேந்திர சிங், வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க மற்றும் சமூக சேவகர்களான சுழல் பந்து வீச்சாளர் முரளீதரனின் தந்தை எஸ்.முத்தையா, முருகாமலை கோவில் நிர்வாக சபை அங்கத்தவர் பெ.செல்லையா உற்பட மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.