ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஸ்தாபிப்பதில் முன்னணி வகித்த முன்னாள் செனட் சபை உறுப்பினர் சட்டத்தரணி எச்.ஸ்ரீ. நிஸ்ஸங்கவின் உருவப்படம் ஒன்றை ஸ்ரீ லங்கா சுதந்திரக்  கட்சி தலைமையகத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (04) முற்பகல் திரைநீக்கம் செய்து வைத்தார்.

தேசிய அபிலாஷைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சிரேஷ்ட தலைவர்களுள் ஒருவரான அரச சட்டத்தரணி எச்.ஸ்ரீ. நிஸ்ஸங்கவின் சிரார்த்த தினம் பெப்ரவரி 26ஆம் திகதியாகும்.

அதனை முன்னிட்டு அவரின் உருவப்படம் ஒன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டதுடன், ஜனாதிபதி  அதற்கு மலரஞ்சலி செலுத்தினார்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர, தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் டி சில்வா உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களும் அமல் கருணாரத்ன, அவந்தி கருணாரத்ன மற்றும் எச்.ஸ்ரீ நிஸ்ஸங்கவின் குடும்ப உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேநேரம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புனரமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற காலி மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி செயற்குழு கூட்டத்திலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.