(எம்.எப்.எம்.பஸீர்)

காலி, ரத்கமவில் வர்த்தகர்கள் இருவரை கடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில்  கைதுசெய்யப்பட்ட பொலிஸ் கான்ஷ்டபில் மற்றும் வன இலாகா அதிகாரி ஆகியோரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க காலி நீதிமன்றம் உத்தரவிட்டது.

சந்தேகநபர்கள் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 48 மணி நேர தடுப்பு விசாரணைகளின் பின்னர் காலி நீதிவான் ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.