மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா வனவிலங்கு உயிரியல் பூங்காவில் இருக்கும் 2 வெள்ளைப் புள்ளிகளை தத்தெடுத்துள்ளார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி திரைப்படத்தில் நடித்து வந்தாலும், சமூக பொறுப்புடன் சமூகத்துடன் மிக அதிக அளவில் உறவாடி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. சமூகத்தின் தேவை என்ன என்பது குறித்து உற்று கண்காணித்து அதற்கான தன்னுடைய பங்களிப்பை நிறைவாக செய்து வருவதில் முன்னணியில் இருக்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

அந்த வகையில் சென்னை வண்டலூர் வனவிலங்கு உயிரியல் பூங்காவில் இரண்டு வெள்ளை புலிகளை தத்தெடுத்து இருக்கிறார். இதன் முதல் கட்டமாக அதனை பராமரிப்பதற்காக வனவிலங்கு நிர்வாகத்திடம் ஐந்து இலட்ச ரூபாய் காசோலை ஒன்றை கைளயித்திருக்கிறார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் பொன்ராம் கூட்டணியில் உருவாகவிருக்கும் புதிய படத்தினை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பதற்கு முன்வந்திருக்கிறார் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. 

கார்த்திக் சுப்புராஜ் ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து பீட்சா ,இறைவி, பேட்ட போன்ற படங்களை இயக்கி இருக்கிறமை குறிப்பிடத்தக்கது.