(நா.தினுஷா)

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது மாத்திரமல்லாமல் பாரிய மாற்றங்களுடனான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித் பி.பெரேரா குறிப்பிட்டார். 

மேலும் நிறைவேற்று அதிகாரத்தை நிக்கி புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியில் ஐக்கிய தேசிய முன்னணி உறுதியாக உள்ளது. புதிய அரசியலமைப்பினூடாக ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் நிக்கப்படுவது மாத்திரமல்லாமல் பாராளுமன்றத்தில் தெரிவு செய்யப்படும் அமைச்சரவைக்கு நிறைவேற்று அதிகாரத்தை பெற்றுக்கொடுப்பதற்காக வழிமுறைகளும் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு நிறைவேற்று அதிகாரத்தை நிக்குவது தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.