சர்வதேச கிரிக்கெட் நிறுவனத்தால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிதி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்று குழு மற்றும் சர்வதேச கிரிக்கெட் நிறுவனத்திற்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையையடுத்து குறித்த நிதியை விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கட் நிறுவனத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியே இவ்வாறு இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு விடுவிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் விடுவிக்கப்படவுள்ள நிதி இலங்கை ரூபா பெறுமதியின் படி சுமார் 2 பில்லியன் ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.