(நா.தனுஜா)

காணாமல்போனோர் அலுவலகத்தின் இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவாறு காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கும் பரிந்துரை விரைவாக அமுல்படுத்தப்பட வேண்டும் என காணாமல் போனோர் அலுவலகத்தின் தவிசாளர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

அத்தோடு காணாமல் ஆக்கப்படல், அதனுடன் தொடர்புடைய குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின்பேரில் பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட வேண்டும் என்ற பரிந்துரையையும் செயற்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

காணாமல்போனோர் அலுவலகத்தின் மாத்தறை மாவட்ட பிராந்திய அலுவலகத்த‍தைி றந்து வைத்து உரையாற்றும்பேதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.