(எம்.மனோசித்ரா)

நாளை சமர்ப்பிக்கப்படவுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எந்தவிதமான இறுதி தீர்மானத்தையும் இன்னும் மேற்கொள்ளவில்லை என மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று சமர்பிக்கப்படவுள்ள வரவு - செலவு திட்டத்திற்கு சுதந்திர கட்சியின் ஆதரவு குறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு வரவு - செலவு திட்டத்திற்கு தாம் ஆதரவளிக்கப் போவதில்லை என தமது நிலைப்பாட்டை தெரிவித்து வருகின்றனர். அவர்களது தரப்பிலும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை காணப்படுகின்றது. அதேவேளை மக்கள் விடுதலை முன்னணியும் இந் நிலைப்பாட்டிலேயே உள்ளதாக அறிய முடிகின்றது. 

எனவே வரவு - செலவு திட்டத்திற்கு ஆதரவளிக்கின்றமை குறித்து சுதந்திர கட்சி தீர்க்கமாக சிந்தித்து தீர்மானங்களை முன்னெடுக்கும்.