வெளிநாட்டில் தயாரிக்கப்படும் கைக்குண்டு மற்றும் சட்டவிரோத மதுபானத்துடன் காவத்தை பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கஹவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் காவத்தை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து வெளிநாட்டு கைகுண்டு ஒன்றும், 15 ஆயிரம் மில்லி லீட்டர் சட்டவிரோதமான மதுபானமும் பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளது.

கஹவத்தை பொலிஸார் சந்தேக நபரை நேற்று முன்தினம் பெல்மடுலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி உள்ளதுடன், நீதவான் அவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.