தீவிரவாதத்தினை ஒடுக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு வலியுறுத்தியுள்ளார். 

மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் பதற்றத்தை தணிக்கும் வகையில் இந்திய விமானி அபிநந்தனை விடுவித்ததற்கு இங்கிலாந்து பிரதமர் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

அதோடு பாகிஸ்தானில் இருக்கும் அனைத்து தீவிரவாத குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் குறித்தும் அவர் இதன்தபோது வலியுறுத்தினார்.