குழந்தைகளின் விபரங்களை தவறாக பயன்படுத்திய டிக்டாக் செயலிக்கு அபராதம்

Published By: Digital Desk 3

04 Mar, 2019 | 10:26 AM
image

குழந்தைகளின் விவரங்களை முறைகேடாகச் சேகரித்த குற்றச்சாட்டில் பிரபல வீடியோ செயலியான டிக் டாக் செயலிக்கு அமெரிக்கா ரூ.40 கோடி அபராதம் விதித்துள்ளது. சிறுவர்களின் தகவல்களை அனுமதி இல்லாமல் திரட்டியதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டருக்கு அடுத்தபடியாக அதிகப்படியான மக்கள் பயன்படுத்தும் செயலி என்றால் டிக்டாக் செயலி தான். இந்த செயலியை வயது வித்தியாசம் இன்றி எல்லாருமே பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக இளைஞர்கள் மற்றும்   பெண்கள் மத்தியில் அதிக அளவில் டிக் டாக் மோகம் காணப்படுகிறது. ஒரு பாடலையோ, இசையையோ அல்லது வசனத்தையே பின்னால் ஓடவிட்டு அதற்கு ஏற்றாற் போல் வாயை அசைப்பது மற்றும் நடிப்பது போன்றவை இந்த செயலில் செய்யப்படுகிறது.

முன்னதாக மியூசிக்கலி என்ற பெயரில் இயங்கி வந்த வீடியோ செயலியையும் கடந்த 2017-ல் டிக்டாக் செயலி தன்னுடன் இணைத்துக் கொண்டது. இந்நிலையில் 13 வயதுக்குக் குறைவான குழந்தைகள், செயலிகளைப் பயன்படுத்தும் முன்னர் பெற்றோரிடம் அனுமதி பெற வேண்டியது அமெரிக்கச் சட்டத்தின்படி அவசியம். ஆனால் அதை டிக் டாக் கடைபிடிக்கவில்லை.

குழந்தைகளின் பெயர்கள், இ-மெயில் முகவரிகள் மற்றும் பிற  சொந்த விவரங்களைப் பெறும் முன்னர், பெற்றோரிடம் அனுமதி பெறவேண்டிய கட்டாயத்தை டிக் டாக் செயல்படுத்தவில்லை. தங்களின் செயலியை ஏராளமான குழந்தைகள் பயன்படுத்துவது தெரிந்தும் அவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு நடக்கவில்லை.

இந்த அபராதம் குழந்தைகளைக் குறிவைக்கும் அனைத்து இணையதள சேவைகளுக்கும் இணையதளங்களுக்கும் ஓர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கான சட்டத்தை மீறும் நிறுவனங்களை நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம்'' என்று அமெரிக்க வர்த்தக ஆணையம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26