பிபிசி

தமிழில் வீரகேசரி இணையம்

2009 மார்ச் 3 ம் திகதி இலங்கை கிரிக்கெட் அணி பாக்கிஸ்தானின் லாகூரில் டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடுவதற்காக மைதானத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது.

ஒன்பது மணிக்கு முன்னதாக கடாபிமைதானத்திற்கு அருகில் அவர்கள் பயணம் செய்த பேருந்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது

துப்பாக்கிகள் கைகுண்டுகள் ஆர்பிஜிகளை பயன்படுத்தி இந்த தாக்குதல் இடம்பெற்றது

இங்கிலாந்து அணியின் தற்போதைய பயிற்றுவிப்பாளர் டிரெவெர் பெய்லிசும் அவரது உதவியாளர் போல் பர்பிரேசும் அவ்வேளை இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர்களாக பணியாற்றிக்கொண்டிருந்தனர்

அவர்கள் அந்த பேருந்தில் அணியினருடன் பயணித்துக்கொண்டிருந்தனர்

அன்றைய தினம் என்ன நடந்தது பர்பிரேஸ் இவ்வாறு தெரிவிக்கின்றார்-

அணியில் உள்ள அனைவரும் அதிஸ்டத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் இதன் காரணமாக பேருந்தில் ஒரே இருக்கையிலேயே அமருவோம்.

நான் பேருந்துசாரதியின் ஆசனத்திலிருந்து மூன்று ஆசனஙகள் பின்னால்  வலது பக்கத்தில் அமர்வது வழக்கம்

அன்று என்னுடைய கண்ணாடிகளை துடைத்தவாறு பந்துவீச்சாளர்களிற்கு என்ன தெரிவிக்கப்போகின்றோம் என்பது குறித்து பெய்லிசுடன் உரையாடிக்கொண்டிருந்தேன்.

திடீர் என பேருந்து குலுங்கியபடி நின்றது

நான் திரும்பி வெளியே பார்த்தேன், நபர் ஒருவர் எங்களை நோக்கி துப்பாக்கியுடன் வருவதையும் எங்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதையும் என்னால் பார்க்கமுடிந்தது.

அதன் பின்னால் நான் பேருந்தின் முன்னாள் என்ன நடக்கின்றது என்று பார்த்தேன் - வெள்ளை நிற காரை காணமுடிந்தது,அந்த கார் சுற்றுவட்டத்தினால் சுற்றி வந்து எங்கள் பேருந்தினை தடுத்து நிறுத்தியிருந்தது.

அதன் பின்னர் பேருந்து மீண்டும் குலுங்கியது.

பேருந்தில் இருந்த இலங்கை வீரர்கள் குண்டுதாக்குதல்கள் குறித்த அனுபவமுள்ளவர்கள். குண்டுதாக்குதல் இடம்பெற்றால் நிலத்தில் விழுந்துபடுக்கவேண்டும் என்பதை அறிந்தவர்கள்,இதன் காரணமாக தங்கள் ஆசனத்திலிருந்து பாய்ந்து பேருந்தின் நடுப்பகுதியில் அவர்கள் விழுந்து படுத்தனர்.

நான் பேருந்து குலுங்கியவேளை உட்பகுதியில் விழுந்தேன்.

எனக்கு அருகில் இரத்தத்தை கண்டேன்,முதலில் அது எங்கிருந்து வெளியாகின்றது என்பது எனக்கு தெரியவில்லை பின்னரே எனது முழங்கையில் காயமேற்பட்டுள்ளதை நான் உணர்ந்தேன்.

கைக்குண்டுகள் எங்களை காயப்படுத்தின,எங்கள் உடலில் சிதறல்கள் காணப்பட்டன,

எனக்கு முன்னால் அமர்ந்திருந்த அஜந்தமென்டிஸ் பேருந்திற்குள் விழுந்து கிடந்தார், அவரது தலையின் பின்பகுதியிலிருந்து இரத்தம் வெளியேறிக்கொண்டிருந்தது.

எனக்கு பின்னாலிருந்த தரங்க பரணவிதானவின் நெஞ்சை  குண்டுசிதறலொன்று தாக்கியிருந்தது,அவர் வெள்ளை சேர்ட் முற்றிலும் குருதியில் நனைத்திருந்தது,

எங்கள் உடற்பயிற்சியாளரும் ஏனையவர்களும் ஆசனத்திலிருந்து அவரை கீழே இறக்க முயற்சித்துக்கொண்டிருந்தனர்.

குமார் சங்ககாரவும் திலான் சமரவீரவும் அருகருகில் அமர்ந்திருந்தனர்

குமார் சங்ககார பேருந்திற்குள் விழுந்தவேளை திலான் சமரவீர அவரின் மேல் விழுந்தார்,அவ்வேளை துப்பாக்கிகுண்டொன்று அவரை வலதுகாலை துளைத்தது.

நான் மரணிப்பது குறித்து சிந்திக்கவில்லை,நான் அச்சப்படக்கூடவில்லை, ஆனால் காயமடைந்த எனது கையை பார்த்து தயவு செய்து மீண்டுமொரு தடவை என்மீது தாக்குதலை மேற்கொள்ளாதீர்கள் என நான் நினைத்துக்கொண்டேன்- இன்னொரு தாக்குதலை சந்திக்க நான் விரும்பவில்லை.

துப்பாக்கிகுண்டுகள் பேருந்தை தாக்கியவண்ணமிருந்தன,ஆனால் பேருந்திற்குள் அனைவரும் மிகவும் அமைதியாக காணப்பட்டனர்

அவர்களது துப்பாக்கிகள் பேருந்தை சேதப்படுத்திக்கொண்டிருந்தன,பேருந்தின் கண்ணாடிகளை சேதப்படுத்திக்கொண்டிருந்தன.

ஆனால் அவ்வேளை என்னால் ஒரேயொரு குரலை மாத்திரம் கேட்க முடிந்தது- அது டில்சானின் குரல்

அது மிகவும் தனித்துவமான குரல்- என்னால் இன்றும் அதனை கேட்க முடிகின்றது.எனது வாழ்நாள் முழுவதும் டில்சான் அந்த குரலை கேட்பேன்.

அவர் எப்போதும் பேருந்துசாரதிக்கு பின்னால் அமர்ந்திருப்பார். 

அன்று அவர் பேருந்தை பின்னோக்கி செலுத்துமாறு சத்தமிட்டதை என்னால் கேட்க முடிந்தது.

பேருந்து சாரதி தனது ஆசனத்தில் அமர்ந்து கையை மாத்திரம் மேலே வைத்து வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்தார்.

அவர் இவ்வாறு பேருந்தை பின்னோக்கி செலுத்த தொடங்கினார் அவ்வேளை டில்சான் அவரிற்கு உத்தரவுகளை வழங்கிக்கொண்டிருந்தார்.

தாக்குதல் மேற்கொள்பவர்களிடமிருந்து விலகி எப்படி செல்வது என்பதற்கான உத்தரவை அவர் பேருந்து சாரதிக்கு வழங்கிக்கொண்டிருந்தார்.

அன்றைக்கு எங்கள் உயிர்களை காப்பாற்றியதற்காக பேருந்து சாரதியை அனைவரும் பாராட்டினார்கள் ,அந்த பயங்கரமான நிலையிலிருந்து எங்களை காப்பாற்றிய அவரது திறமை மிகவும்அற்புதமானது.

ஆனால்டில்சானின் துணிச்சலும் எங்களை காப்பாற்றியது என நான் இன்றுவரை  கருதுகின்றேன்.

அச்சமின்றி அந்த இடத்தில் நின்று சாரதிக்கு முழுமையாக உதவிபுரிந்து அவருடன் கதைத்து  ஆலோசனை வழங்கி எங்கு திரும்பவேண்டும் என வழிகாட்டி அவர் எங்கள் உயிர்களை காப்பாற்றினார்.

அந்த சம்பவம் பல வருடங்களாக நீடித்தது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது,ஆனால் அது ஒரு சில செகண்ட்களே நீடித்தது- ஒருநிமிடம் என தெரிவிக்கலாம்.எவ்வளவு நேரம் அந்த சம்பவம் நீடித்தது என்பதை இறுதிவரை என்னால் தெரிவிக்க முடியாது.

நாங்கள் பாதுகாப்பாக வந்து சேர்ந்ததும் மருத்துவ பணியாளர்கள் வரத்தொடங்கினார்கள்,அதிகாரிகளும் வரத்தொடங்கினார்கள்

எனது அணியினர் காயமமைடந்து வீழ்ந்து கிடைப்பதை பார்த்தவேளையே- வலியில் துடிப்பதை பார்த்தவேளையே நாங்கள் நிலைமையின் பாரதூரத்தை உணர்ந்துகொண்டோம்

அவர்கள் எங்களை அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர் ஆனால் நான் மறுத்துவிட்டேன்,மீண்டும் வீதியால் நான் பயணிக்கப்போவதில்லை. எனினும் திலான் சமரவீரவும்  தரங்கபரவிதாரனவும் ஆபத்தான காயங்களை அடைந்திருந்தால் அவர்களை மருத்துவமனைக்கு அம்புலன்ஸ் மூலம்  கொண்டு செல்லவேண்டிய நிலை காணப்பட்டது.