இவ்­வ­ரு­டத்­துக்­கான வரவு செலவு திட்டம் நாளை நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வினால் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. 

2019 ஆம் ஆண்­டுக்­கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்­கீ­டாக   445000 கோடி ரூபா ஒதுக்­க­ப்பட்­டுள்­ள­துடன் இதில்   216000 கோடி ரூபாவை கட­னாக பெறவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. 

இந்த ஆண்­டுக்­கான வரவு செலவு திட்­டத்தை கடந்த ஆண்டு சமர்ப்­பிக்க முடி­யாத நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இடைக்­கால வரவு செலவு திட்டம் ஒன்­றினை அர­சாங்கம் முன்­வைத்­தது. 

இவ்  இடைக்­கால கணக்­க­றிக்­கையில் இந்த ஆண்டு  முதல் நான்கு மாதங்­க­ளுக்­காக 1765 பில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இதில் சேவை­க­ளுக்­காக 790 பில்­லியன் ரூபாவும், திரட்டு நிதி­யத்­துக்­காக 970 பில்­லியன்  ரூபாவும், முற்­ப­ணங்­க­ளுக்­காக 5 பில்­லியன்  ரூபாவும் ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தன. 

இத­னைத்­தொ­டர்ந்து  2019 ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்ட நிதி ஒதுக்­கீட்டு  பிரே­ரணை  கடந்த பெப்­ர­வரி மாதம் 5ஆம் திகதி சபை முதல்வர் லக்ஸ்மன் கிரி­யெல்­ல­வினால் முன்­வைக்­கப்­பட்­டது. 

இப் பிரே­ர­ணையில்  இம்­முறை வர­வு­செ­லவு திட்­டத்தில்  445000 கோடி ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தாக  குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதில் கடன் பெறக்­கூ­டிய தொகை 216000 கோடி ரூபா­வாகும். அத்­துடன்  இக்­குறை நிரப்­பியில் ஜனா­தி­ப­திக்கு 1355 கோடியே 7180000 ரூபாவும், நிதி மற்றும் வெகு­சன ஊடக  அமைச்­சுக்கு 18384 கோடியே 5358000 ரூபாவும், பாது­காப்பு அமைச்­சுக்கு 39306 கோடியே  9030000 ரூபாவும்,  பிர­த­மரின் அமைச்­சான தேசிய கொள்­கைகள்,பொரு­ளா­தார அலு­வல்கள் ,மீள் குடி­யேற்றம்,புனர்­வாழ்­வ­ளிப்பு,வட­மா­காண அபி­வி­ருத்தி,வாழ்க்கை தொழிற்­ப­யிற்சி,திறன் அபி­வி­ருத்தி,மற்றும் இளைஞர் அபி­வி­ருத்தி அமைச்­சுக்கு 9830கோடியே  9652000ரூபாவும் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

  சுகா­தார அமைச்­சுக்கு 18748 கோடியே 2398000ரூபாவும்   வீட­மைப்பு ,நிர்­மா­ணத்­துறை,மற்றும் கலா­சார அமைச்­சுக்கு 1663 கோடியே 1300000 ரூபாவும் கல்வி அமைச்­சுக்கு 10500கோடி ரூபாவும் மலை நாட்டு புதிய கிரா­மங்கள்,உட்­கட்­ட­மைப்பு வச­திகள்,மற்றும் சமு­தாய அபி­வி­ருத்தி அமைச்­சுக்கு 388 கோடியே 3000000ரூபாவும் பெருந்­தோட்ட கைத்­தொழில் அமைச்­சுக்கு 856 கோடியே 2000000ரூபாவும் கைத்­தொழில் வாணிப ,நீண்­ட­கால இடம்­பெ­யர்ந்தோர் மீள்­கு­டி­யேற்றம்,மற்றும் கூட்­டு­றவு அபி­வி­ருத்தி அமைச்­சுக்கு 289கோடியே 4900000ரூபாவும் உள்­ளக,உள்­நாட்டு அலு­வல்கள் ,மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராச்சி அமைச்­சுக்கு 29239 கோடியே 6005000ரூபாவும் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.மிகுதி ஏனைய அமைச்­சுக்­க­ளுக்கும் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. 

சலு­கைகள்

இம்­முறை வரவு செலவு திட்­டத்தில் அரச ஊழி­யர்­க­ளுக்கு சம்­பள அதி­க­ரிப்பு வழங்­கப்­படும்  எனவும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. சுய­தொழில், நிவா­ரண கடன்கள்,   சலு­கைகள் என இம்­முறை உள்­ள­டக்­கப்­ப­ட­வு­மையும் குறிப்­பி­டத்­தக்­கது. அத்­துடன் வெளி­நாட்டு கொடுப்­ப­ன­வு­களை இலங்­கைக்குள் கொண்­டு­வரல், ஏற்­று­ம­திக்­கான தடை­களை நீக்­குதல் என்­ப­னவும் வாகன வரி­களில் மீள­மைக்­கப்­படும் எனவும், மது­பான வரிகள் அதி­க­ரிக்கும் எனவும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அதேபோல் பெருந்­தோட்ட துறை­யி­ன­ருக்­கான நிவா­ர­ணங்கள், தேயிலை தொழி­லா­ளர்­க­ளுக்கு நாளொன்­றுக்கு 50 ரூபாய் கொடுப்­ப­னவு என்­ப­னவும் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளது. 

பாது­காப்பு 

நாளைய தினம் பாரா­ளு­மன்­றத்தில் பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் பலப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன. குறிப்­பாக பாரா­ளு­மன்ற சபை ஆச­னங்­களை சபை அமர்­வு­க­ளுக்கு முன்னர் பரி­சோ­தனை செய்­யவும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் அறை­களை  பரி­சோ­தனை செய்­யவும் ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ள­துடன், பாரா­ளு­மன்ற கலரி நாளைய தினம் பொது­மக்கள் பாவ­னைக்கு அனு­ம­திக்­கப்­பட மாட்­டது. சிறப்பு அதி­திகள் மாத்திரம் கலரியில் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் செவ்வைக்கிழமை சபைக்கு வரும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள் நுகசெவன வாகன தரிப்பிடத்தில் நிறுத்தப்படுவதுடன் சிறப்பு அதிதிகள் ஜயந்திபுர வாகன தரிப்பிடங்களில் அவர்களின் வாகனங்களை நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்ற வளாகத்துக்குள் எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படாது.