துர்முகி வருடப் பிறப்பு : ஒரே பார்வையில் இரு கணிப்பு

Published By: Robert

11 Apr, 2016 | 04:00 PM
image

 

 அறுபது வருட சுழற்சியில் 30ஆவது வருடமான துர்முகி  வருடம் நாளை மறுநாள் மாலை மலரவிருக்கின்றது. இதனை  எதிர்கொள்ள  இறுதிக்கட்ட பொருள் விற்பனையிலும் கொள்வனவிலும்  வர்த்தகர்களும் பொது மக்களும் ஈடுபட்டுள்ளனர். மலிவு விற்பனை ஒருபுறம் ஏட்டிக்குப் போட்டியாக நடக்க மறுபுறம்  வீதியோர வியாபாரம்  மட்டுமன்றி  வீதிக்கு வீதி மக்களின் காலடியிலும் வியாபாரம் நடைபெற்று வருகின்றது. 

புதுவருட பிறப்பு பற்றி வழமை போல் வாக்கிய பஞ்சாங்கமும்  திருக்கணித பஞ்சாங்கமும் இருவேறு கணிப்புகளைத்  தந்துள்ளன. 

அதன் விபரம்  வருமாறு,

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி  13 ஆம்  திகதி  இரவு 6.30 மணிக்கு புதுவருடம் பிறக்கிறது. அன்று பிற்பகல் 2.30 மணி தொடக்கம்  இரவு 10.30 மணிவரை புண்ணிய  காலமாகும். சிரசில் கடப்பம் இலையும் காலில் வேப்பம்  இலையும் வைத்து  மருத்து  நீர் தேய்த்து நீராட  வேண்டும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. 

திருக்கணித  பஞ்சாங்கமோ  நாளை மறுநாள் 13 ஆம் திகதி இரவு 7.48 மணிக்கு  பிறப்பதாக கணித்துள்ளது. அன்று  பிற்பகல்  3.48 மணி தொடக்கம் இரவு 11.48  மணிவரை புண்ணிய காலமாகும்.  சிரசுக்கு வேப்பம் இலையும்  காலுக்கு கொன்றை இலையும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

இருப்பினும் புதுவருடத்தில் இராசி ரீதியான வரவு செலவு  எவ்வாறு அமையும் என்பதில் இரு பஞ்சாங்கங்களின் கணிப்பும் ஒரே மாதிரியாக காணப்படுகின்றன. அதன் விபரத்தை கீழே பார்க்கலாம். 

இராசி                   வரவு              செலவு

                           (பங்கு)             (பங்கு)

மேடம்                       2                    8

இடபம்                      11                   14

மிதுனம்                     14                   11

கடகம்                        14                    2

சிம்மம்                       11                    5

கன்னி                        14                    11

துலாம்                      11                     14

விருச்சிகம்                 2                      8

 தனு                          5                      14

மகரம்                        8                       8

கும்பம்                       8                       8

மீனம்                         5                      14

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22