(எம்.ஆர்.எம்.வஸீம்)

பாராளுமன்றத்தில் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய அனைத்து உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வோம் என அமைச்சரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரயெல்ல தெரிவித்தார்.

கண்டி கலகெதர தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

நிறைவேற்று ஜனாதிபதி பதவியை இல்லாமலாக்குவது மற்றும் புதிய தேர்தல் முறைமை தொடர்பில் கட்சிகளுக்கு மத்தியில் இன்னும் இணக்கப்பாடு இல்லாமல் இருக்கின்றது. அதிகார பரவலாக்கம் தொடர்பில் கட்சிகளுக்கிடையில் இணக்கப்படாடு இருப்பது, வழிநடத்தல் குழுவில் வெளிப்பட்டுள்ளது. அதுதொடர்பான பிரேரணைகளை அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து சமர்ப்பிக்கும் எனவும் இதன்போது குறிப்பிட்டார்.