(எம்.மனோசித்ரா)

நிற‍ைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பான பேச்சுவார்த்தையை மேற்கொள்ள மக்கள் விடுதலை முன்னணி அழைத்தால் அதில் கலந்துகொள்ள தயார் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அத்தோடு, நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்குவது மாத்திரமின்றி தேர்தல் முறைமையிலும் மாற்றத்தை கொண்டுவர வேண்டிய அவசியமாகும். 

தேர்தல் முறைமையின் காரணமாக கடந்த தேர்தலில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன. எனவே இந்த விடயத்திலும் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.