பிரித்தானிய ராணியை சந்திப்பதற்காக ஜோர்டான் நாட்டு மன்னர் இரண்டாம் அப்துல்லா, இளவரசர் ஹுசைன் மற்றும் ராணி ரனியா ஆகியோர் பக்கிங்காம் அரண்மனைக்கு சென்றிருந்தனர்.

அங்கு பிரித்தானிய ராணியும், இளவரசி அன்னேவும் கைகொடுத்து அவர்களை வரவேற்றனர். இந்த நிகழ்வின் போது, ராணியி கையில் நீல நிறத்தில் பெரிய அடையாளம் இருப்பதை அரண்மனை ரசிகர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வயது முதிர்வு உள்ளிட்ட காரணங்களால், இப்படி நேர்ந்திருக்கலாமோ என்ற சந்தேகம் அனைவர் மத்தியிலும் எழத் தொடங்கியுள்ளது .


இந்த நிலையில் நீல நிறத்தில் மாறியிருப்பது குறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், ராணியின் கையில் சிறிய காயம் ஏற்பட்டிருக்கலாம். அதனால் தான் அவரது இடது கை நீல நிறமாக மாறியிருக்கிறது. வயது முதிர்வு மற்றும் மெல்லிய தோல் காரணமாக அந்த அடையாளம் முழுவதும் குணமடைய சிறிது தாமதமாகலாம் என விளக்கம் கொடுத்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.