நாவலப்பிட்டி, ஜயசுந்தர பிரதேசத்தில் ரயில் பாதையில் சென்று கொண்டிருந்த இருவர் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர். 

குறித்த சம்பவத்தில் 15 வயதுடைய யுவதியை காப்பாற்ற சென்ற 16 வயது இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு கோட்டையில் இருந்து எல்ல நோக்கி சென்ற ரயிலுடன் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த இருவரினதும் சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேதே அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பாக நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்