அம்பலங்கொட, கந்தேகொட பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டு வீடு முழுமையாக எரிந்து சேதமடைந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நேற்று இரவு 8.30 இற்கும் 09.30 மணிக்கும் இடையில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுதது பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தீயினை கடுப்படுத்தியுள்ளனர்.

தாயும் மகளும் குறித்த வீட்டில் வசித்து வந்துள்ள போதிலும் தீ பரவல் எற்பட்ட போது வீட்டில் யாரும் இருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த தீ பரவலுக்கான  சரியான காரணம் கண்டறிப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.