தனது செயல்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டுமென்ற சிறந்த பாடத்தை அனைத்து மக்களுக்கும் இந்திய விமானி அபிநந்தன் புகட்டியுள்ளதாக இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை சச்சின் டெண்டுல்கர், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார் அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அபிநந்தன் தனது வீரம், சுயநலமின்மை, விடாமுயற்சி ஆகியவற்றினால் அனைத்து மக்களுக்கும் சிறந்த பாடத்தை கற்பித்துள்ளார்.

தனது செயல்கள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டுமெனவும் அவர் உணர்த்தியுள்ளார்” என சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் நடந்த விமான தாக்குதலில் இந்திய விமானி அபிநந்தன், பாகிஸ்தான் இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் இந்தியாவிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு பிரபலங்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.