மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த அனுராதபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மதுபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சட்டிற்கமைவாகவே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. 

அனுராதபுரம் சிறைச்சாலைக்கு அருகில் இடம்பெற்ற மேற்படி விபத்தில் பெண்ணொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.