(ஆர்.யசி)

நிறைவேற்று அதிகாரத்தை நீக்க முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தாம் தயாராக உள்ளதாகவும் அனைவருமே இணக்கம் தெரிவித்துள்ள இந்த விடயத்தை உடனடியாக செயற்படுத்த வேண்டும் என  அமைச்சரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். 

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 

புதிய அரசியல் அமைப்பின் மூலமாக அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் எப்போதுமே உள்ளோம். நாம் ஆட்சிக்கு வந்தவுடன் கொடுத்த முதல் வாக்குறுதியும் அதுவேயாகும். 

ஜனாதிபதியும், பிரதமரும் பல சந்தர்பங்களில் இந்த வாக்குறுதிகளை கொடுத்துள்ளனர். அவ்வாறு இருக்கையில் இந்த காரணிகளை இழுத்தடிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. நேற்று ஜனாதிபதியுடன் நடைபெற்ற  கூட்டத்திலும் இந்த காரணிகள் குறித்து சகல கட்சிகளும் பொது இணக்கப்பாட்டில் கருத்துக்களை முன்வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.