(ஆர்.யசி)

நாம் உருவாக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையோ நாம் உருவாக்கிய நல்லாட்சியையோ எக்காரணத்திற்காகவும் ராஜபக் ஷவினருக்கு பலிகொடுக்க மாட்டோம் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 

எமது நாட்டு மக்கள் எமக்குக் கொடுத்த ஆணையினை எம்மால் மீறமுடியாது.  நாம் அனைவரும் ஒன்றாகவே உள்ளோம். ஜனாதிபதி இன்றும் எம்மோடுதான் உள்ளார். எதிர்காலத்தில்  நல்ல காட்சிகள் அரங்கேறும். நாம் மைத்திரிபால சிறிசேனவை ஆயுதமாக பயன்படுத்த மாட்டோம். அவருடன் அரசியல் உடன்படிக்கை ஒன்றும் செய்யவில்லை. ஆனால் அவரை பாதுகாக்க வேண்டிய கடமை எமக்கு உள்ளது. அவருக்கு நெருக்கடி உருவாக நாம் இடமளிக்க மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.