கடந்த 26ஆம் திகதி கேப்பாப்பபிலவு பகுதியிலிருந்து காணி மீட்புப் போராட்டப் பேரணி ஆரம்பிக்கப்பட்டு கிளிநொச்சி ஊடாக இன்று வவுனியா பழைய பேருந்து நிலையத்தினை சென்றடைந்தது.

வடமாகாண மக்களின் காணிப் போராட்டத்தினை வலுப்படுத்துவதற்காகவும் முல்லைத்தீவிலிருந்து இம் மக்களின் பேரணியானது நாளைய தினம் கொழும்பினை சென்றடையவுள்ளது. அரசின் மூலம் மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக கட்டாயப்படுத்தலே இம் மக்களின் பேரணியின் நோக்கமாகும்.

 காணிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு கேப்பாலப்பிலவு, யாழ்ப்பாணம் வலிவடக்கு, மயிலிட்டி பலாலி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மன்னார் சிலாவத்துறை மக்களினதும் பல ஆண்டுகளாக சட்டத்தில் மூலம் நீதியைப் பெற்றுக்கொள்ளவதற்காகப் போராடும் பள்ளிமுனை மக்களினதும் காணி உரிமையையும் கடற்படையால் கையகப்படுத்தியுள்ள முள்ளிக்குளம், சாம்பூர், பானம, அஸ்ரப், நகர மக்களின் காணிகளையும் அம்மக்களுக்கே மீளக் கையளிக்குமாறு கோரி வடபிரதேசத்தில் பேரணியாக வலம் வந்துகொண்டுள்ளது. 

இன்றைய தினம் முற்பகல் 11மணியளவில் பழைய பஸ் நிலையத்தினைச் சென்றடைந்து 11.45 மணியளவில் இலுப்பையடிப்பகுதியில் கையெழுத்து பெற்றுக்கொள்ளப்பட்டு அங்கிருந்து அனுராதபுரம் ஊடாக இன்று பிற்பகல் புத்தளத்தினைச் சென்றடையவுள்ள இப்பேரணியானது நாளைய தினம் கொழும்பில் நிறைவடையவுள்ளது.