சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான கடன் திட்டத்தின் காலத்தை நீடிக்கவும் 6 ஆம் கட்ட கொடுப்பனவை வழங்கவும் இணங்கியுள்ளது.

இந்நிலலையில், 1.5 பில்லியன் ரூபா கடன் திட்டத்தின் கால வரையறையை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ள நிலையிலேயே 6 ஆம் கட்ட கடன் கொடுப்பனவை வழங்கவும் அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் 1.5 பில்லியன் டொலர் கடனை மேலும் ஓராண்டுக்கு நீடிக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே கடன் திட்டத்தின் கால அளவை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது