இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் , சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவிருக்கிறார்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான ’பேட்ட’ படம் 50 ஆவது நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.இந்த படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார். 

இந்நிலையில் இந்த படத்திற்கு இந்த படத்தில் சுப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்க லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாராவும்,  மக்கள் செல்வி கீர்த்தி சுரேஷ் என இரண்டு நடிகைகள் தெரிவாகியிருக்கிறார்கள். சுப்பர் ஸ்டாருக்கு இந்த படத்தில் இரண்டு வேடங்கள் என்பது இதன் மூலம் தெரியவருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாரா ரஜினிகாந்துடன் சந்திரமுகி, சிவாஜி, குசேலன் ஆகிய படங்களுக்கு பிறகு நான்காவது முறையாக இந்த படத்தில் இணைகிறார் என்பது  குறிப்பிடத்தக்கது.