பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபாவை உயர்த்துமாறு கோரி, முற்போக்கு தமிழர் அமைப்பு மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னாள் கவனயீர்பு ஆர்ப்பாட்டமும் கையெழுத்து வேட்டையும் இன்று வியாழக்கிழமை (28) முன்னெடுத்துள்ளது. 

இதில், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் இந்த கையெழுத்துவேட்டையும் கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்படவேண்டும் எனவும், பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்த்து கொடுக்கப்படவேண்டும் போன்ற கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடனர்.

இதனைத் தொடர்ந்து பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபா வழங்கவேண்டும் என வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட இக்கையெழுத்து வேட்டை பின்னர்  கடைகள் மற்றும் வீதிகளில் பிரயாணிப்போரிடமும் ஆதரவு தேடி கையெழுத்து பெறபட்டது. 

கிழக்கில் இருந்து 10 ஆயிரம் கையெழுத்து பெறப்பட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் இந்திய தூதரகம் , பிரித்தானிய தூதரகங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.