(எம்.மனோசித்ரா)

பழைய முறைமையிலேனும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்பார்ப்பாகவுள்ளதாக அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். 

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர், 

பல மாகாணங்களுக்கான ஆயுட் காலம் நிறைவடைந்து ஒன்றரை வருடங்கள் பூர்த்தியாகின்றன. இந் நிலையில் இன்னும் அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கின்றமை பிழையான விடயமாகும். 

புதிய முறைமையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தால், அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் காரணம் கூறிக் கொண்டு தேர்தலை மேலும் கால தாமதப்படுத்தக் கூடும். எனவே பழைய முறைமையில் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானித்தால் விரைவில் தேர்தலை நடத்தி முடிக்கக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.